முக்கியச் செய்திகள் குற்றம்

ஈரோட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது!

கடம்பூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த பகுதிகளில் மான்கள் இறைச்சிக்காக வேட்டையாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளனர்.

அப்போது அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களின் நாட்டு துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அவர்கள், நரசாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் மற்றும் கருப்புசாமி என்பதும், இருவரும் இறைச்சிக்காக மான்களை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா

Halley karthi

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனத்தின் புதிய யுக்தி?

Halley karthi

கூகுளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ஏற்பட்ட பிரச்னை…. பயனாளர்கள் அதிருப்தி!

Saravana