துணை நடிகையை தாக்கியதாக திமுக பிரமுகர் மீது புகார்

வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கியதாக, திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி(48). இவர்…

வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கியதாக, திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி(48). இவர் ’ஒரு குப்பையின் கதை’ படத்தில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இந்நிலையில், திமுக பிரமுகர் ஒருவரின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து தன்னையும் தனது மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாண்டிலட்சுமி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் அந்த புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளையும் கொண்டு இருதரப்பினரையும் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.