அடிக்கடி முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக விடுப்பு எடுத்துச் சென்ற மதுரை சிறைக் காவலர்கள் 2 பேரை சிறைத் துறை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலரான ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் கிளைச் சிறையில் இரண்டாம் நிலை காவலரான அஜித்குமார் ஆகிய இருவரும் சிறைத் துறை நிர்வாகத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி தன்னிச்சையாகச் செயல்பட்டு விடுப்பு எடுத்துக் கொண்டதாக இருவர் மீது புகார் எழுந்தது.
அதனடிப்படையில் சிறை நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் இதுபோன்று பலமுறை தன்னிச்சையாக செயற்பட்டதற்காக அவர்கள் மீது பல முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்ததை தொடர்ந்து இரண்டாம் நிலைக் காவலர்களான ராமச்சந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் டிஸ்மிஸ் செய்து மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று அடிக்கடி தன்னிச்சையாக விடுப்பு எடுப்பது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத் துறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.








