32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ஹாலிவுட்டில் நடிக்க தயாராகும் ராம் சரண்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து அதிகபடியான அன்பையும் பாராட்டுகளையும் பெற்று வரும் நடிகர் ராம் சரண், விரைவில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் என இரு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததோடு, விருதுகளையும் தொடர்ந்து அள்ளி வருகிறது. அந்த வரிசையில் ஜனவரியில் நடந்த 80வது கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடலாக எம்.எம். கீரவாணி இசையமைத்த தெலுங்கு மொழிப் பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகி வரலாறு படைத்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தவிர, இதே பாடலுக்காக உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது மாதிரியான எடுத்துக்காட்டாக மாறிய ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு விழாக்களில் பங்கேற்று வருகின்றனர், மேலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வரிசையில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள ராம் சரண், அண்மையில் அமெரிக்காவில் நடந்துள்ள அந்தப்படத்தின் திரையிடலை மக்களுடன் கண்டுகளித்ததோடு, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதிகப்படியான மகிழ்ச்சி, உற்சாகம், வரவேற்பு மக்களிடத்தில் கிடைத்துள்ளது என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க ‘ஆர்ஆர்ஆர்’ பெற்று கொடுத்த மெகா வெற்றியையும், புகழையும் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 15-வது பட த்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்து வருவதோடு, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ராம் சரண் விரைவில் ஹலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் ராம் சரணே சமீபத்தில் சாம் ஃப்ராகசோவின் போட்காஸ்டில் பேசியிருந்தார். அங்கு அவர் தனது அறிமுகத்திற்காக ஹாலிவுட்டின் சில புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியதோடு, தனது ஹாலிவுட் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில
நாட்களில் வெளியாகும் என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிலும் அவர் பகிர்ந்து கொண்டார் .

மேலும் அந்த பேட்டியில் ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ், ஜூலியா ராபர்ட்ஸ் மற்றும் பிராட் பிட் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த உறுதிப்படுத்தல் மூலம் ‘உலகளாவிய நட்சத்திரமாக’ ராம் சரண் மிகவிரைவில் மாற உள்ளார் என்ற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள்
மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading