திருச்சி, மாம்பழ சாலை அருகே செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் 2 குழந்தைகள் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளன.
திருச்சி, சாக்கீடு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு 8 குழந்தைகளுக்கு சளி மற்றும் ஒவ்வாமை காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தைகள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2 குழந்தைகள் மட்டும் தீவிர சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகளும் உயிரிந்தனர். இந்த நிலையில், 2 குழந்தைகளும் தீவிர சளி மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக, மருத்துவமனையின் முதல்வர் நேரு தெரிவித்துள்ளார்.







