Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » 2 50 crores in the bank account of the young man police investigation
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி! தலைமறைவான இளைஞர்! போலீசார் தீவிர விசாரணை!

பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி திடீரென வரவுவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார்…

Author Avatar

Web Editor

August 14, 202411:47 am bank accountCuddalorePoliceYoungster

பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி திடீரென வரவுவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (25). இவர் மீது முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலையத்தில் இவரது பெயர் ரௌடிகள் பட்டியலில் உள்ளது.

முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள தேசிய வங்கியில் அசோக்குமார் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடி செலுத்தப்பட்டதாம். இது தொடர்பாக, வங்கி அதிகாரிகள் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் பணம் வந்ததாக கூறினாராம். அதிகாரிகள் வங்கி பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போது, பங்குச் சந்தையில் இருந்து பணம் வரவில்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்துக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அசோக்குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 கோடியை மட்டும் இணையவழியில் நண்பர்கள் 7 பேரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாராம். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!

By Web Editor January 19, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

By Web Editor January 19, 2026

“உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா?” – அன்புமணி கண்டனம்!

By Web Editor January 19, 2026

“திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By Web Editor January 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:bank accountCuddalorePoliceYoungster

Post navigation

Previous Previous post: #Thangalan மிகப்பெரிய வெற்றி பெறும் – படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா!
Next Next post: #SaripodhaaSanivaaram – நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ டிரெய்லர் வெளியானது!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading