கல்லூரி தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான புத்தகப் பரிசு!

செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப்பெற்ற 441 மாணவ மாணவிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நூல்களைத் தமிழ் துறை சார்பில் வழங்கப்பட்டது.…

செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப்பெற்ற 441 மாணவ மாணவிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நூல்களைத் தமிழ் துறை சார்பில் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற 441 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 2.5 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு பரிசாக கல்லூரி தமிழ் துறை சார்பில், தமிழ்த்துறை தலைவர் முனைவர் கண்ணன் வழங்கினார்.
கல்லூரி மாணவ மாணவிகள் கல்வியில் மிகவும் ஆர்வமுடன் வளர்ச்சி பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் துறை சார்பில் இந்த புத்தகங்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்குப் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன.
—–சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.