இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குச் சென்றது.
நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 4 மண்டலங்களிலிருந்து தலா 8 அணிகள் வீதம், 32 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்றும், இன்றும் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில், திருச்சி மண்டலம் கே.எஸ்.ஆர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கே.எஸ்.ஆர் கல்லூரி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பாரதிதாசன் பல்கலைக்கழகம் அணி, கே.எஸ்.ஆர் கல்லூரி வெற்றி பெற 84 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கே எஸ் ஆர் கல்லூரி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய அனோவங்கர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 84 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாடிய கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குச் சென்றது. இதில் கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர் அணிவங்கர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவருக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நடுவர் சௌமியா ஆட்டநாயகன் விருதை வழங்கினார்.







