புதிதாக 2.38 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 லட்சத்து…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 310 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 8 ஆயிரத்து 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிகையில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 31,111 புதிய தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டில், 23,443 இன்றைய தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.