இந்தியா – இலங்கை முதல் டி-20, நாளை தொடக்கம்: தேவ்தத்திற்கு வாய்ப்பு?

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்…

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி, நாளை இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் பந்துவீச்சாளர் அவேஸ் கான், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இந்தியா திரும்புகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு பதிலாக இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பிருத்வி ஷாவும், சூரியகுமார் யாதவும் இங்கிலாந்து செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

அது உண்மை என்றால், டி-20 தொடரில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள். இதனால் இளம் வீரர் தேவ்தத் படிகலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிருத்வி ஷா இல்லாததால், ஷிகர் தவானுடன் தேவ்தத் அல்லது ருதுராஜ் களமிறக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.