தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து…

தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை காலத்திற்கு முன்னரே வெயில் கொளுத்தியது.  தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில்,  தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

சென்னை (நுங்கம்பாக்கம்) – 100.22 டிகிரி பாரன்ஹீட்

சென்னை (மீனம்பாக்கம்) – 104 டிகிரி பாரன்ஹீட்

கோயம்புத்தூர் – 103.1 டிகிரி பாரன்ஹீட்

தர்மபுரி – 108.5 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு – 111.2 டிகிரி பாரன்ஹீட்

கரூர் பரமத்தி – 111.74 டிகிரி பாரன்ஹீட்

காரைக்கால் – 100.58 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் – 107.6 டிகிரி பாரன்ஹீட்

நாகப்பட்டினம் – 102.2 டிகிரி பாரன்ஹீட்

நாமக்கல் – 107.6 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை – 104.9 டிகிரி பாரன்ஹீட்

சேலம் – 107.96 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் – 104 டிகிரி பாரன்ஹீட்

திருப்பத்தூர் – 107.96 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி – 108.86 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி – 108.14 டிகிரி பாரன்ஹீட்

வேலூர் – 110.48 டிகிரி பாரன்ஹீட்

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

https://twitter.com/ChennaiRmc/status/1786017302061973962?t=dFK1Dgo81fXb6NdSGq5diQ&s=09

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.