தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை…

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

அவர்களை விசாரித்த க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர். ஒரே நாளில் 5 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ள நிலையில், மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும், அதனால் தமிழ்நாடு வந்துள்ளதாகவும் அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர். மேலும் பலர் அங்கிருந்து வர உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.