பொள்ளாச்சியில் ரூ.170.23 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி மாட்டுச்சந்தை அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.170.23 கோடி மதிப்பில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் கூடுதலான நீர்மட்டம் உள்ளது. கோடை காலங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கூடுதலான தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இதில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.







