சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்கு தற்போது வரை 17 ஆயிரம் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கு 17 ஆயிரம் புதிய மாணவர் சேர்க்கை தற்போது வரை நடைபெற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா சூழலிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மாநகராட்சி அதிகரித்துக் காட்டியது. அதேபோலவே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாக 17,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
-ம.பவித்ரா







