நெல்லை கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய 165-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய 165வது ஆண்டு திருவிழாவை
முன்னிட்டு மீனவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியைக் கூட்டப்புளி பங்குத் தந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இப்போட்டியில் 6 நாட்டுப்படகுகளில் படகு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கூட்டப்புளியிலிருந்து தோமையார்புரம் வரை 36 கி.மீ தூரம் கடலில் சென்றனர். இதில், முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயம், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
பாய்மர படகு போட்டியை கான சுற்றுவட்டார பகுதியைசேர்ந்த திரளான மக்கள் கலந்து
கொண்டனர்.கூடன்குளம் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் காவலர்கள் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர்.







