தனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரமஹம்ச யோகானந்தாவின் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் யோகா செற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். யோகதா சத்சங்கத்தை சேர்ந்த சுவாமி சுக்தானந்தா ரஜினிகாந்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர், யோகதா சத்சங்க புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டார்.
மேடையில் பேசிய ரஜினிகாந்த்,
“நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபாதான்.
இந்த இரு படங்கள் வெளியான பிறகு தான் மக்கள் பலருக்கும் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி தெரியவந்தது.
என் ரசிகர்கள் பலர் யோகதா சத்சங்கத்தில் இணைந்து சந்நியாசியாக மாறியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,
முதலில் நாம் நமது உடல் நலனை பார்த்து கொள்ளவேண்டும். நாம் கடைசி காலத்தில் சொத்துக்களை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தாம் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்றதை குறிப்பிட்டு கூறிய ரஜினிகாந்த்,
சங்தோஷமாக இருக்கும் போதே மருத்துவமனைக்கு செல்லாமல் உயிரிழக்க வேண்டும் என கூறினார்.
மேலும், பணம், புகழ், பெயர் என அனைத்தையும் தாம் பார்த்துள்ளதாகவும் பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் பழகியுள்ளதாகவும் கூறிய ரஜினிகாந்த், ஆனால் இதுவரை சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என கூறினார்.நிம்மதி மட்டுமே நிரந்தரம் சந்தோஷம் வந்து வந்து செல்ல கூடியது என தெரிவித்தார்.