எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது! இலங்கை கடற்படை அடாவடி!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தோடு 2 விசைப்படங்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.  தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக…

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தோடு 2 விசைப்படங்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். 

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக மாறிப்போயுள்ளது. சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் துப்பாகிச்சூடு கூட நடத்தியிருக்கின்றனர்.

ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் தமிழ்நாட்டு மீனவர்களை பிடிக்கும் போது மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பின் விடுதலைச் செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்களது படகுகள் உடனடியாக விடுவிக்கப்படுவதில்லை. இலங்கையிலேயே தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்று கிடப்பதால் பெருத்த இழப்புக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகின்றனர்.

இந்நிலையில், தற்போதும் மீண்டும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.அதோடு 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த பின் மீனவர்களை படகுகளுடன் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகரிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.