ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 15பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு!

ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்ட 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல்…

ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்ட 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த
இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 56 கோடியே 82
லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக, ஐ.எஃப்.எஸ் மார்க் ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட 6 நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள் : குரூப் 2 தேர்வு குளறுபடி ; மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

இதனையடுத்து மோசடி செய்த மூன்று நிறுவனத்தை சேர்ந்த 15 பேரை, தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.  ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ். ஹிஜாவு ஆகிய 3 நிறுவனத்தைச் சேர்ந்த, இயக்குநர்கள், முக்கிய நிர்வாகிகளான 15 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் அவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்று நிறுவனங்களின் வழக்கு விசாரிக்கும் விசாரணை அதிகாரியின் தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியையும் பொருளாதார் குற்றப்பிரிவு போலீசார் வழங்கியுள்ளனர்.

அண்மைச் செய்தி: ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்

ஆருத்ரா வழக்கு :

கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப் பிரிவு, சென்னை.
மொபைல் எண் : 9597254575  மின்னஞ்சல் முகவரி : dspeowhqrs5@gmail.com

ஐஎஃப்எஸ் வழக்கு : 

காவல் துணைக் கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப் பிரிவு, சென்னை.
மொபைல் எண் :  9176603938  மின்னஞ்சல் முகவரி :  dsp3eowhors@gmail.com

ஹிஜாவு வழக்கு: 

காவல் துணைக் கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப் பிரிவு, சென்னை.
மொபைல் எண் : 9840355691 மின்னஞ்சல் முகவரி :  dspcciwcidcni@gmail.com

ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் சிலர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.