மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும்15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள்…

மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும்15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக, தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

கடந்த 24ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்த 22 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 75 ஆயுள் தண்டனை கைதிகளை முதல்கட்டமாக தமிழரசு உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 15 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததில் அடிப்படையில் இன்று மதுரை சிறையில் இருந்து 15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பில் மரக்கன்று, திருக்குறள் புத்தகம் உள்ளிட்டவை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.