எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி…

தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்த்ய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் ஜுலை 1ஆம் தேதி கடலுக்கு சென்ற போது இலங்கை கடற்படை கைது செய்தது.இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.