12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; ஆல்ஃபபெட் நிறுவனம் அறிவிப்பு

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. எலான்…

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். இதேபோல் அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

இந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், இது நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய தருணம். வேலை இழக்கும் ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் 16 வாரங்களுக்கான ஊதியம், அதாவது 4 மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ம் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்திருந்த நிலையில், அடுத்த ஓரிரு நாள்களில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.