உலகம் வணிகம்

வாரன் பஃபெட்டாக விருப்பம்: முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டும் 12வயது சிறுவன்!

பங்குகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன்.

தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் க்வான் சூன், தொடர்ந்து வணிகம் சம்பந்தமான முதலீடுகள் சம்பந்தமான செய்திகளை படித்து வருகிறார். அதனைப் பார்த்து தானும் முதலீட்டாளரான வாரன் பஃபெட் போல வர வேண்டும் என கனவு கண்ட க்வான், பொழுதுபோக்கிற்காக கடந்த வருடம் வணிகப் பங்குகளை வாங்க ஆரம்பித்தார். அதன்மூலம் தற்போது 43 சதவிகிதம் வரை வரை வருமானம் ஈட்டியுள்ளார்.

சிறுவன் என்பதால் க்வான் தனது தாயாரை தொந்தரவுப்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில்லரை வணிகத்திற்கான ஒரு கணக்கை தொடங்கினார். அது ஆரம்பித்த தொகையில் இருந்து அதிகளவில் வருமான ஈட்டித் தந்துள்ளது. தசாப்தத்திற்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிய சம்பவங்கள் நிகழும் என தனது வல்லுனர்கள் தொலைக்காட்சியில் கூறியதை பார்த்த பின்னர்தான் அதனை நம்பினேன் என்று கூறிய க்வான், தான் இதுபற்றி தனது பெற்றோரிடம் கேட்டு தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.

க்வான் தனது ரோல் மாடலாக அமெரிக்க பணக்காரரும், முதலீட்டாளருமான வாரென் பஃபெட்டை கருத்துவதாகவும் கூறினார். குறுகிய கால முதலீடுகளுக்கு பதிலாக 10-20 வருட நீண்டகால முதலீடுகளிலேயே தான் கவனம் செலுத்தவும், அதிகளவு வருமான ஈட்டவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வளவு சிறிய வயதில் இப்படியான சாதனையை க்வான் நிகழ்த்தியது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்த அவரின் தாயார், இப்படியிருக்க கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறுவது தேவையா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!

தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்

Gayathri Venkatesan

மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்: குரங்கிடம் வெற்றிகரமாக சோதனை!

எல்.ரேணுகாதேவி

Leave a Reply