எனது தாயை மன்னித்துவிடுங்கள்: தூக்கு தண்டனை கைதியின் மகன் கோரிக்கை

தாயின் கருணை மனுவை மீண்டும் ஒரு முறை கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விடுங்கள் என குடியரசுத் தலைவரிடம் தூக்கு தண்டனை கைதியின் மகன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை…

தாயின் கருணை மனுவை மீண்டும் ஒரு முறை கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விடுங்கள் என குடியரசுத் தலைவரிடம் தூக்கு தண்டனை கைதியின் மகன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை பெறும் முதல் பெண்மணி சப்னம். 2008ஆம் ஆண்டு தன் குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்ததற்காக இம்மாத இறுதியில் தூக்கு தண்டனை பெறுகிறார். இந்நிலையில் சப்னமின் 12 வயது மகனான தாஜ் முகமது, கரும்பலகையில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந் அவர்களிடம், தன் தாயின் கருணை மனுவை மீண்டும் ஒரு முறை கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விடுமாறு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே சப்னமின் உறவினர்கள் இக்கோரிக்கை மனுவை நிராகரிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். தண்டனையை நிரைவேற்றினால் மட்டுமே எங்கள் ஆதங்கம் தீரும் என்று கூறி வருகின்றனர். 2008ஆம் ஆண்டு சப்னமின் கைதிற்கு பிறகு தாஜ் முகமது தன் சிறு வயது முதல் தாயை பிரிந்து குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.