மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயிலில் 2 கிலோ மீட்டர் வரையிலான பயணத் தொலைவுக்கு…

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயிலில் 2 கிலோ மீட்டர் வரையிலான பயணத் தொலைவுக்கு கட்டணம் மாற்றமின்றி 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டில் இருந்து 5 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு 20 ரூபாயும், 5 முதல் 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 12 முதல் 21 கிலோ மீட்டர் வரை செல்ல 40 ரூபாயும், 21ல் இருந்து 32 கிலோ மீட்டர் வரை பயணிப்போருக்கு 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண குறைப்பு, நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.