தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12 சதவீதம் வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12 சதவீதம் வாக்கு பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12 சதவீதம் வாக்கு பதிவாகின. 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளன.  அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு விவரம் வருமாறு:

திருவள்ளூர் –          12.31%
வடசென்னை –         9.37%
தென் சென்னை –    10.08%
மத்திய சென்னை – 8.59%
ஸ்ரீபெரும்புதூர் – 11.18%
காஞ்சிபுரம் –             12.25%
அரக்கோணம் –      12.64%
வேலூர் –                       12.76%
கிருஷ்ணகிரி –         12.57%
தருமபுரி –                     15.04%
ஆரணி –                       12.69%
விழுப்புரம் –                13.97%
கள்ளக்குறிச்சி –        15.10%
சேலம் –                            14.79%
நாமக்கல் –                    14.36%
ஈரோடு –                         13.37%
திருப்பூர் –                      13.13%
நீலகிரி –                         12.18%
கோயம்புத்தூர் –      12.16%
பொள்ளாச்சி –           13.36%
திண்டுக்கல் –             13.16%
கரூர் –                             14.41%
திருச்சிராப்பள்ளி 11.82%
பெரம்பலூர் –            14.35%
கடலூர் –                        12.22%
சிதம்பரம் –                 12.90%
மயிலாடுதுறை –    12.08%
நாகப்பட்டினம் –    12.98%
தஞ்சாவூர் –                12.91%
சிவகங்கை –             12.06%
மதுரை                        11.00%
தேனி                            13.15%
விருதுநகர்                13.05%
ராமநாதபுரம்          11.79%
தூத்துக்குடி               11.62%
தென்காசி                 11.82%
திருநெல்வேலி       11.39%
கன்னியாகுமரி     11.92%

மொத்தம்                   12.55%

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.