சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும்…

சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும் சூழலில் படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல நாளை (17.07.2021) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21 தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்க இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதிற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 25 ஆயிரம் பேர் ஐந்து நாள் பூஜைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.