12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக இன்றைக்குள் நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த சட்ட மசோதா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் அரசு சார்பில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சி.வி.கணேசன். எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : புலிகேசி நகரில் பாஜக சார்பில் போட்டியிடுவது தமிழர்தான்; கர்நாடகாவில் வெற்றி உறுதி! – அண்ணாமலை பிரத்யேக பேட்டி
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் இன்றுக்குள் நல்ல முடிவு வராவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.