முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

மன்னாரில் இருந்து தமிழகம் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில்முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இதன்காரணமாக மக்களின் அத்தியாவசிய பொருட்கள், உணவு, உயிர்காக்கும் மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து இலங்கை அரசு பதவி விலக கோரி மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்கள் தங்கள் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள தமிழ்நாட்டிற்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 80-க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு படகில் செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 பெண்கள், 5 ஆண்கள், 1 சிறுவர் உள்ளிட்ட 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

Vandhana

தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை!

வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி; புதிதாக15 குழுக்கள்

Halley Karthik