தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்: வைகோ

தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாகக்கூறி தீக்குளித்து உயிரிழப்பு செய்து கொண்ட முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில்…

தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாகக்கூறி தீக்குளித்து உயிரிழப்பு செய்து கொண்ட முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நினைவிடத்தின் அருகில் அமைக்கப்பட்ட முத்துக்குமாரின் சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என சிலர் திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார். தனி ஈழம் அமைவது ஒன்று தான் இதற்கு தீர்வு என்றும் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply