குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வானவில் மனமகிழ் மன்றத்தில்  சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.29 ,000 மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வானவில் மனமகிழ் மன்றத்தில்  சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.29 ,000 மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை பகுதி தனியார் மண்டபம் அருகில் வானவில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்டகிளப் நடப்பதாக கரூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளருக்கு சென்ற தகவலையடுத்து மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் திடீரென வானவில் மனமகிழ் மன்றத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தோகைமலை கருப்பு கோவில் செல்வம், தினேஷ், ராக்கம்ம்பட்டி பொன்னுசாமி, சங்காயிபட்டி சரவணன்,
நாடக்காப்பட்டி பொன்னுசாமி தோகைமலை மகேஸ்வரன், உப்பிலியம்பட்டி ஆனந்த்,
சங்காயிபட்டி விஜயன், கன்னிமார் பாளையம் குமரேசன், சங்காயிபட்டி பழனிச்சாமி மற்றும் உப்பிலியப்பட்டி வடிவேல் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.29,000 மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்து தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும்,  அரசு அனுமதி இல்லாமல் ரம்மி சூதாட்டம் விளையாடியதாக  அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து குளித்தலை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஈடுபடுத்தி, பின்னர் குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 1 ல் நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

—ரூபி.காமராஜ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.