ஒரு கையால் குக்கரை திறக்கும் கனடா நாட்டை சேர்ந்தவர்; உங்களால் முடியுமா ?- வைரல் வீடியோ!

இந்தியாவில் வசிக்கும் கனேடிய நாட்டை சேர்ந்தவர் ஒரு கையால் பிரஷர் குக்கரைத் திறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியாவில் வசிக்கும் சில வெளிநாட்டினர் பல்வேறு விஷயங்களை வலைப்பதிவுகள் அல்லது வ்லாக் வடிவில் ஆவணப்படுத்துகிறார்கள்.…

இந்தியாவில் வசிக்கும் கனேடிய நாட்டை சேர்ந்தவர் ஒரு கையால் பிரஷர் குக்கரைத் திறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் வசிக்கும் சில வெளிநாட்டினர் பல்வேறு விஷயங்களை வலைப்பதிவுகள் அல்லது வ்லாக் வடிவில் ஆவணப்படுத்துகிறார்கள். அவர்களில் ஒருவரான  கனடாவைச் சேர்ந்த காலேப் ஃப்ரைசென்  கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார்.

அவர் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய வீடியோக்களை எடுத்து வருவதாக தனது ட்விட்டர் பயோவில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் ஒரு கையால் பிரஷர் குக்கரைத் திறப்பதை வீடியோவை வெளியிட்டு இணையத்தில் வைரகானார்.

https://twitter.com/caleb_friesen2/status/1648190656161157120?s=20

மேலும், பல இந்தியர்களால் செய்ய முடியாத ஒரு திறமை என்று பலர் கம்மெண்ட் செய்து வருகின்றனர். “கிட்டத்தட்ட 6 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்த பிறகு, நான் இறுதியாக அதைச் செய்தேன்: என்னால் ஒரு கையால் பிரஷர் குக்கரைத் திறக்க முடியும்!” என தனது வீடியீவோவில் பகிர்ந்துள்ளார்.  அவர் ஒரு கையால் பாத்திரத்தின் மூடியைத் திறப்பது மட்டுமல்லாமல் அதை மூடுவதையும் செய்வது பார்போரை வியப்படைய செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.