பக்தர்கள் முடி காணிக்கை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை கோடி வருமானமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி ஏலம் விடப்பட்ட வகையில், தேவஸ்தானத்திற்கு ரூ.105 கோடி வருமானம் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக…

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி ஏலம் விடப்பட்ட வகையில், தேவஸ்தானத்திற்கு ரூ.105 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை அவற்றின் நீளத்திற்கு ஏற்ப தரம் பிரித்து பாதுகாத்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைமுடி ஏலம் திருப்பதியில் நடைபெறும்.

அந்த வகையில், திருப்பதி தேவஸ்தானத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த தலைமுடி சர்வதேச அளவில், இன்று ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. அந்தவகையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2.09 லட்சம் கிலோ எடையுடைய தலை முடியை ஏலம் விட்டதன் மூலம் ரூ.105 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.