30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

உலக சாதனைக்காக 104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி: வைரல் வீடியோ!

104 வயது மூதாட்டி கின்னஸ் உலக சாதனைக்காக ஸ்கை டைவிங் செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சாதிக்க நினைப்பவர்களுக்கு வயது ஒரு எண் மட்டுமே. சாதனைகளுக்கு வயது என்றும் தடையில்லை என்று கூறுவார்கள். அதனை 104 வயதை சேர்ந்த ஒருவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் அப்படி என்னதான் செய்தார்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோ லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது. அந்த வீடியோ ஆரம்பித்தவுடன், 104 வயதுடைய மூதாட்டி சிகாகோவை சேர்ந்த பயிற்றுவிப்பாளருடன் பாராசூட்டில் ஸ்கை டைவ்விங் செய்து வருகிறார்.

டோரதி என்ற அந்த மூதாட்டி தரையிறங்கியவுடன், அவரை சுற்றியுள்ளவர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்குகிறார்கள். டோரதி எப்படி உணர்கிறாள் என்று ஒரு வர்  கேட்கிறார். . அதற்கு அவர் “சூப்பர் ” என்று பதிலளிக்கிறார்.

அதிக வயதில் ஸ்கை டைவிங் சாதனைக்காக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த மூதாட்டிக்கு இணையத்தில் பாராட்டுககள் குவிந்து வருகின்றன. டோரதி இந்த ஜம்ப் மூலம் சாதனை படைத்தாரா என்பதை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. .

ஏற்கனவே ஸ்வீடனைச் சேர்ந்த மூதாட்டி பாராசூட் ஜம்ப் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவர் ஒரு வருடத்திற்கு முன்பு, 2022 இல், 103 வயது 259 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading