104 வயது மூதாட்டி கின்னஸ் உலக சாதனைக்காக ஸ்கை டைவிங் செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சாதிக்க நினைப்பவர்களுக்கு வயது ஒரு எண் மட்டுமே. சாதனைகளுக்கு வயது என்றும் தடையில்லை என்று கூறுவார்கள். அதனை 104 வயதை சேர்ந்த ஒருவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் அப்படி என்னதான் செய்தார்?
இது தொடர்பாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோ லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது. அந்த வீடியோ ஆரம்பித்தவுடன், 104 வயதுடைய மூதாட்டி சிகாகோவை சேர்ந்த பயிற்றுவிப்பாளருடன் பாராசூட்டில் ஸ்கை டைவ்விங் செய்து வருகிறார்.
டோரதி என்ற அந்த மூதாட்டி தரையிறங்கியவுடன், அவரை சுற்றியுள்ளவர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்குகிறார்கள். டோரதி எப்படி உணர்கிறாள் என்று ஒரு வர் கேட்கிறார். . அதற்கு அவர் “சூப்பர் ” என்று பதிலளிக்கிறார்.
அதிக வயதில் ஸ்கை டைவிங் சாதனைக்காக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த மூதாட்டிக்கு இணையத்தில் பாராட்டுககள் குவிந்து வருகின்றன. டோரதி இந்த ஜம்ப் மூலம் சாதனை படைத்தாரா என்பதை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. .
ஏற்கனவே ஸ்வீடனைச் சேர்ந்த மூதாட்டி பாராசூட் ஜம்ப் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவர் ஒரு வருடத்திற்கு முன்பு, 2022 இல், 103 வயது 259 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.







