சர்வதேச அளவில் 100வது டி20 போட்டியை விளையாட உள்ள விராத் கோலி, விமர்சனங்களுக்கு பதலடி கொடுப்பாரா என எதிபார்ப்பு.
ஆசிய கோப்பை கிரிகெட் தொடர் நேற்று துபாயில் தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் 100வது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் மூன்று வகை கிரிக்கெட்டிலும், 100 போட்டிகள் விளையாடிய வீரர் எனும் வரலாற்று சாதனையினை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 3308 ரன்களும் 30 அரை சதங்களும் விளாசியுள்ளர்.மேலும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டியைப் பொறுத்த வரையில் விராட் கோலி சர்வதேச அளவில் இன்னும் சதம் அடிக்கவில்லை. விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 94 ரன்களுக்கு நாட்-அவுட் என்பது தான். டி20 போட்டியில் இதுவரை விராட் கோலி, 299 பவுண்டரிகளும், 93 சிக்ஸர்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் ரன்கள் குவிக்க திணறி வரும் விராட் கோலியின் 100 வது போட்டி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த விராட் ஹார்ட் டூ ஹார்ட் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, நான் மனதளவில் பலவீனமாக உள்ளதை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, நான் ஒரு மாதமாக எனது பேட்டை தொடவில்லை எனவும் கூறியிருந்தார். இது அவரது ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்நிலையில் இருந்து மீண்டு வர அவர்கள் விரும்பினர்.
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா 132 சர்வதேச இருபது ஓவர் போட்டியில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த நிலையில், 100 வது இருபது ஓவர் போட்டியில் களம் இறங்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பை பெறுகிறார் விராட் கோலி. இந்நிலையில் விராட் கோலியின் 100 வது சர்வதேச போட்டியில் அவர் நன்கு விளையாடி சதம் அடித்து, விமர்சனங்களுக்கு பதலடி கொடுப்பாரா என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்பில் உள்ளனர்.







