பழனி மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்!

பழனியில் மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவங்கி நடைபெற்று…

பழனியில் மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின்
உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவங்கி நடைபெற்று
நிறைவடைந்தது.  இந்நிலையில் மாசித் திருவிழாவை முன்னிட்டு,  மாரியம்மனுக்கு 1008 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.  பின்னர்,  பெண்கள் தலையில் சுமந்து வந்த பாலினை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.  தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் பழனிவேல், விஜயகுமார், கார்த்திக், பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, திமுக செயலாளர் வேலுமணி, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் உட்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.