தமிழகத்தில் 100 இடங்களில் கொரோனா சித்தா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே உள்நோயாளிகளாக சேர்க்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நோயாளிகளை அனுமதித்த பிறகு ஆக்சிஜன் இல்லை எனக்கூறி வெளியேற்றுவது அவர்களின் உயிரோடு விளையாடுவது போன்றது என்றும், இதுபோன்ற செயல்களில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள், ஆபத்தான கட்டத்தை எட்டும்போது அனுப்பி வைக்கப்படுவதால் தான், அரசு மருத்துவனைகளில் நோயாளிகள் ஆம்புலென்சில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.