தமிழ்நாட்டின் 16 இடங்களில் இன்று கோடை வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
குறிப்பாக இரண்டாவது நாளாக இன்று அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
- சென்னை நுங்கம்பாக்கம் – 105.44
- சென்னை மீனம்பாக்கம் – 105.44
- கடலூர் – 102.92
- ஈரோடு – 103.64
- கரூர் பரமத்தி – 104.9
- மதுரை நகரம் – 102.2
- மதுரை விமான நிலையம் – 103.28
- நாகப்பட்டினம் – 100.04
- பரங்கிப்பேட்டை – 104.36
- நாமக்கல் – 100.4
- பாளையங்கோட்டை – 102.02
- சேலம் – 102.02
- தஞ்சாவூர் – 102.2
- திருச்சிராப்பள்ளி – 103.1
- திருத்தணி – 105.8
- வேலூர் – 108.14
என மொத்தம் தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. புதுச்சேரியில் 102 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும் வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை தொட்டு கோர தாண்டவம் ஆடுவது போல், அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்சமான வெப்பநிலைப் பதிவு ஆகும். அதேபோல் இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.







