செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடியது செம்பரம்பாக்கம் ஏரி, தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் ஏரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது.
தற்போது இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட மொத்த உயரமான 24 அடியில் தற்போது உயரம் 22.05 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,132 மில்லியன் கன அடியாகவும், வினாடிக்கு நீர் வரத்து 393 கன அடியாகவும் , நீர் வெளியேற்றம் 138 கன அடியாக உள்ளது இன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 22 அடியை தாண்டி இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை முதற்கட்டமாக 10 மணிக்கு 100 கன அடி உபரி நீரானது நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின் பேரில் திறந்து விடப்பட உள்ளது.
மேலும் ஏரி செல்லும் வழித்தடத்தில் கரையோரம் வசிக்கக்கூடிய சிறுகளத்தூர், நந்தம்பாக்கம்,காவனுார் ,திருநீர்மலை , திருமுடிவாக்கம்,குன்றத்தூர் ,வழுதலம்பேடு, உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது அது மட்டுமின்றி பருவமழை தொடங்க உள்ள நிலையில் திடீரென அதிகளவில் நீர் வந்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது அதிகரித்தால் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தற்போது முதற்கட்டமாக இன்றைய தினம் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
அதுமட்டுமின்றி சிக்கராயபுரம் கல்குவாரி முழுவதும் நீர் நிறைந்து காணப்படுவதால் அதிலிருந்து தற்போது தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது பருவமழைக்கும் முன்பு செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை சற்று குறைத்து வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட உள்ளது . குறிப்பிடத்தக்கது.







