முக்கியச் செய்திகள் தமிழகம்

10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு- அண்ணாமலை வரவேற்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் சரித்திர தீர்ப்பு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சின்னப்பா கணேசன் எழுதிய “மோடியின் தமிழகம்” என்ற நூலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார் . அதனை மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி பெற்றுக்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஒன்றரை வருடங்களாக இந்த புத்தகத்தை கனவாக சுமந்து அதற்கு முழு வடிவம் கொடுத்துள்ளார். “மோடியின் தமிழகம்”. மோடியின் குஜராத் என்ற புத்தகத்தை படித்துள்ளார் எழுத்தாளர். 14 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த போது செய்ததை படித்து இவரும் எழுத நினைத்தார். 27 பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு கருத்துக்களை கொண்டுள்ளது.

மதுரையில் பிறந்து இருந்தாலும் தமிழர் இல்லை என்ற பேச்சு குறித்தது. கல்வி கண் திறந்த காமராஜரும் இன்றைய காமராஜரும் என்று ஒரு தலைப்பு, ஜெய்ஹிந்த் செண்பகராமன் கொரோனா காலத்தில் மோடி, உலகத்தின் தலைவர் மோடி ஒண்டி வீரன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் உள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசு மோடி கொண்டுவந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறது. 2002 இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்டாய மத மாற்றம் கொண்டு வருபவர்கள் எதிராக கொண்டு வந்த சட்டம் மாற்றியும் பல பேச்சுக்கள் வந்தன. எதுவும் யாருக்கும் பறி போகாது. மற்ற இட ஒதுக்கீடுகள் மாறாது அது அப்படியே தான் இருக்கும்.

மலைவாழ் மக்கள், எஸ்.சி.எஸ்.டி. என்று யாருடைய இட ஒதுக்கீடு பாதிப்பு இல்லை.
பொருளாதார அடிப்படையில் கஷ்டத்தில் உள்ள சிலருக்கு இந்த இட ஒதுக்கீடு. யாருக்கும் எங்கேயும் இதனால் பாதிப்பில்லை. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கு இது உதவும்.

திமுக விசம பிரச்சாரத்தை விட்டு இந்த இட ஒதுக்கீடுக்காக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். பொய் பிரச்சாரத்தை திமுக விட வேண்டும். தமிழகத்தில் அதிகமாக obc சமுதாய மக்கள் இருக்கின்றனர். எங்கேயும் இல்லாமல் விதி விலக்காக இங்கு அதிக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி போட்டதால் தான் பால் விலை ஏற்றி இருக்கிறோம் என்று பால்வளத்துறை அமைச்சர் சொல்கிறார். அவர் குழம்பி இருக்கிறாரா இல்லை நம்மை குழப்புகிறாரா என்று தெரியவில்லை. ஆவினுக்கு வரக்கூடிய ஏற்றம் 13 ரூபாய். ஆனால் 3 ரூபாய் தான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மாநில அரசை எதிர்த்து 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி

Arivazhagan Chinnasamy

டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

EZHILARASAN D

அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Web Editor