பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு…

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், சிறப்பு பிரிவு காவல்துறையினர், வெடிகுண்டு சோதனை பிரிவு காவல்துறையினர் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவிற்காக பிரம்மாண்டமான அரங்கம், புதிய சாலைகள் மற்றும் பிரத்யேக மண்டபங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் தீவிர சோதனைக்குப் பின்னரே காவல்துறையினரால் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.