6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு- நாராயணசாமி வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு நான் நின்றி தெரிவித்தேன். அதற்கு பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது. எதிரிகளே நல்லது செய்தால் நாம் பாராட்ட வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் 10% இட ஒதுக்கீடு மேல் சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு நடைமுறைபடுத்தவில்லை.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி இதனை நடைமுறை படுத்தகூடாது. புதுச்சேரியில் இடஒதுக்கீடு சம்பந்தமாக மதசார்பற்ற கூட்டணி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுப்போம். வரி மற்றும் விலை வாசி உயர்வால் வியாபாரிகள் மற்றும் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஷ ஊசியை வலி இல்லாமல் போட வேண்டும் என்கிறார். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்வை புதுச்சேரி மாநில அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

முதலமைச்சர் நேற்று பேசும் போது கூட்டுறவு நலிவுக்கு காரணம் ஊழியர்கள் தான் என கூறியுள்ளார். ஆனால் அதனை முழுவதுமாக சீரழித்தது ரங்கசாமி தான். அவர் தான் கொல்லை புற வழியாக ஆட்களை நியமித்ததால் கூட்டுறவு துறைகள் எல்லாம் சீரழித்து விட்டன. ஒருவர் பணி செய்ய வேண்டிய இடத்தில் பத்து பேரை நியமித்ததால் துறைகள் நஷ்டத்தில் இயங்கியது.

தற்போது பான்லே நிர்வாகமும் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் ரங்கசாமி முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தொழிலாளர்கள் மீது பழி சுமத்த கூடாது. புதுச்சேரியில் காவல் துறையினர் முதுகெலும்பு இல்லாமல் செயல்படுகிறது.

சென்னையில் பிடிப்பட்ட வெடிகுண்டுகள் முதலியார்பேட்டையில் தயார் செய்யப்பட்டுள்ளது என சென்னை போலீசார் செய்த விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் செயல்பாடுகள் திறமையின்மையை காட்டுகிறது. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் பேனர் வைப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணி கட்சி என்றாலும் கூட கொலை செய்யப்பட்டது எங்கள் தலைவர். திமுக அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக 7 பேர் விடுதலைக்கு ஆதரவு அளிக்கிறது. 7 பேர் விடுதலையை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொண்டாடி வருவது மனவருத்தை ஏற்ப்படுத்தி வருகிறது என்று நாராயணசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.