6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளராக ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப் பணித் துறைச் செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.