கடலூரில் தந்தை இறந்த சோகத்திலும் மனமுடைந்த நிலையில் தேர்வு எழுதிய
அரசுப் பள்ளி மாணவி 10ம் வகுப்பில் 271 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்
கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஆதிலட்சுமி.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மாநகராட்சி அரசு பள்ளியில் 10ம்
வகுப்பு படித்து வந்தார். கணித தேர்வு நடைபெற்ற அன்று மாணவியின் தந்தை ரவி
உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தையை இழந்த
சோகத்திலும் தேர்வினை எழுதினார்.
இதனையடுத்து இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ஆதிலட்சுமி 271 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தந்தை இறந்த தேதி அன்று எழுதிய கணித தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனையடுத்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவி, எனது தந்தை நான் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து செவிலியராக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் கூறினார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன்.இருப்பினும் எனது தந்தை ஆசையை நிறைவேற்ற 11 மற்றும் 12 வகுப்பில் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.







