3 ஆண்டுகளில் 10 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி… உக்ரைன் அறிவிப்பு!

2022 முதல் நடைபெற்று வரும் போரில் 1 மில்லியன் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதற்கு ரஷ்யா செவி சாய்ப்பதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகாலப் போரில் ரஷிய வீரர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களில் 2.5 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.