இந்தியா செய்திகள்

தொடர்ந்து 3வது நாளாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 6வது நாளாக புதிய பாதிப்பு 10%க்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 2,78,94,800 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,54,54,320 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் 21,14,508 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,25,972 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைவு, கோவையில் உயர்வு!

Karthick

வடமாநில ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி

Niruban Chakkaaravarthi

கொரோனா நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய மாற்றுத்திறனாளி: கேரள முதல்வர் பாராட்டு

Karthick