ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும்: விஜய் வசந்த்

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தாமல், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி…

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தாமல், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கின் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல், புதிய நாடாளுமன்றத்திற்கு பூமி பூஜை போடுவதில் மத்திய அரசு குறியாக உள்ளது என குற்றம்சாட்டினார்.

மேலும், புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தாமல், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய விஜய் வசந்த், காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்றும், ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply