உலக புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் படத்தில் Darth Vader கதாபாத்திரத்தில் நடித்தவரான பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85.
இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ப்ரவுஸ், 1960 களில் பளுதூக்கும் வீரராக இருந்தார். 1962ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இங்கிலாந்து சார்பாக பங்கேற்றவர். மிஸ்டர் இங்கிலாந்து பட்டத்தை 3 முறை வென்றுள்ளார்.
உலக ஆணழகன் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். அப்போதைய காலகட்டத்தில் இப்போதைய நடிகர் அர்னால்ட் உடனும் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
பின்னர், அவரின் உயரம் மற்றும் கட்டுமஸ்தான தோற்றம் காரணமாக சினிமா துறையில் நுழைந்தார் ப்ரவுஸ்.
உலகப் புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரில் வில்லன் கதாபாத்திரமான Darth Vader ஆக நடித்து ப்ரவுஸ் புகழ்பெற்றுள்ளார்.
இதனிடையெ முதுமை காரணமாக நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானதாக அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார்.







