ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நிறுத்திய ஏதெர் நிறுவனம் – காரணம் என்ன?

ஏதெர் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏதெர் 450யின் விற்பனையை ஏதெர் நிறுவனம் நேற்று (நவம்பர் 28) முதல் நிறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. 2018ல் ஏதெர் 450 என்ற மாடல் மூலம் இந்திய எலக்ட்ரிக்…

ஏதெர் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏதெர் 450யின் விற்பனையை ஏதெர் நிறுவனம் நேற்று (நவம்பர் 28) முதல் நிறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

2018ல் ஏதெர் 450 என்ற மாடல் மூலம் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கியது ஏதெர் நிறுவனம். முதலில் பெங்களூருவிலும் பின்னர் சென்னையிலும் இதன் விற்பனை தொடங்கியது. இந்நிலையில் 450 X மற்றும் 450 plus என புதிய இரண்டு மாடல்களை ஏதெர் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இவ்விரண்டு மாடல்களுக்கும் வரவேற்பு அபரிதமாக இருப்பதால் முந்தைய மாடலான ஏதெர் 450-யின் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே பெங்களூரு, சென்னையை தொடர்ந்து வரும் மாதங்களில் மேலும் 9 நகரங்களில் விற்பனையை தொடங்க இருப்பதாக ஏதெர் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, கோழிக்கோடு, ஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா நகரங்களில் விரைவில் சேவையை தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply