மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எல்.முருகன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கேட்டதற்கு கமல் மறுப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
அதனால் பாஜகவில் ஒரு தொண்டனாக தன்னை இணைத்து கொண்டதாக கூறினார். மேலும், விவசாயத்தை பூர்வீகமாக கொண்டவன் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சி தலைமை, விவசாயிகளுக்கு ஆதரவாக செல்லாமல், விரோதமாக சென்றதால், பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்ததாக அருணாச்சலம் கூறினார்.







